இந்தோனேசியாவின் கெபுலாவான் லாட் தீவு பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்தோனேசியாவின் கெபுலாவான் லாட் தீவு பகுதியில் நள்ளிரவு 1.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 6.6 ஆக இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இதனால் என்னென்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகவில்லை.
+ There are no comments
Add yours