இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யாவும் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய லூனா 25 என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது. இது இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தை போல் அல்லாமல் நேரடியாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 10ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்துக்கு முன்பாக நாளை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதிக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிடம் இருந்து தட்டிப்பறிக்க ரஷ்யா முயற்சித்தது. விண்ணில் செலுத்தப்பட்ட லூனா 25 விண்கலம் கடந்த 17ம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.
அதன்பிறகு நிலவின் சுற்றுவட்டாபாதையை குறைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்தது. நாளை நிலவில் தரையிறங்கும் நிலையில் இறுதிக்கட்ட சுற்று வட்டபாதையை குறைக்கும் பணியை ரஷ்ய விஞ்ஞானிகள் செய்தர்ன. ஆனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் இறுதிக்கட்ட லூனா 25 விண்கலத்தின் இறுதிக்கட்ட சுற்றுவட்டாபாதையை குறைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே சுற்றி வந்த நிலவின் சுற்றுவட்ட பாதையிலேயே லூனா 25 விண்கலம் சுற்றி வருகிறது.
இது ரஷ்யாவின் விண்வெளி திட்டத்தில் சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நிலவில் இதுதான் நிலவின் கடைசி சுற்றுவட்ட பாதையின் தூரம் குறைப்பாகும். அதன்பிறகு நேரடியாக நிலவின் தென்துருவத்தில் லூனா 25 விண்கலம் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தரையிறங்குவதற்கு முந்தைய நிலவின் சுற்றுவட்ட பாதையில் லூனா 25 விண்கலத்தில் தூரம் குறைக்க முடியாமல் போய் உள்ளது. இருப்பினும் விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் தகவல் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours