BAPS இந்து கோவிலுக்குள் செல்ல விதிக்கப்பட்ட நிபந்தனைகள் !

Spread the love

துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பா அருகே அமைந்துள்ள அபு முரீகாவில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் BAPS இந்து கோவில் கட்டப்பட்டது. சுமார் 900 கோடி ரூபாய் செலவில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திறந்து வைத்தார்.

ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்கள், இத்தாலி மார்பிள்ஸ் போன்றவற்றால் இந்த கற்கோவில் கட்டப்பட்டுள்ளது. 108 அடி உயரமும், 262 அடி நீளமும், 180 அடி அகலமும் கொண்டதாக 6 கோபுரங்களுடன் அழகிய கலை நயத்துடன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதி பிரதமர் மோடியால் இந்த கோயில் திறக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களின் தரிசனத்திற்காக இந்த கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை கோவில் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை முதல் பல்வேறு விஷயங்களில் வழிகாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி” கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழுத்து, முழங்கை மற்றும் கணுக்கால் வரை உடலை மூடும்படியான உடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொப்பிகள், டி-ஷர்ட்கள் மற்றும் பிறர் மனதை புண்படுத்தும் டிசைன் கொண்ட பிற ஆடைகள் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒளிஊடுருவக்கூடிய அல்லது இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம் என்றும் கோவில் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கவனத்தை சிதறடிக்கும் சத்தம் அல்லது பிரதிபலிப்பை ஏற்படுத்தும் ஆடை பொருட்கள் மற்றும் ஆபரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோவிலின் வழிகாட்டுதல்கள் தெரிவித்துள்ளன. மேலும் செல்லப்பிராணிகளை கோவில் வளாகத்திற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாது என்றும் கோவில் வளாகத்திற்குள் ட்ரோன்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவிலின் அமைதியான சூழலைப் பாதுகாக்கவும், கோவில் வளாகத்தின் ஒழுங்கான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோயிலுக்கு அபுதாபி – குவெய்பாத் ஹைவேயில் (E11) இருந்து அல் தாஃப் சாலை (E 16) வழியே செல்லலாம் என்றும் துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இந்து சமூக மக்கள் கணிசமாக இருக்கும் நிலையில் இந்த கோவிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours