பவர் பாயிண்டை உருவாக்கிய ஆஸ்டின் மரணம்!

Spread the love

பவர் பாயிண்ட் உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் நுரையீரல் புற்றுநோய் காரணமாக நேற்று காலமானார்.

கணினி மென்பொருள் துறையில் வேகமான செயல்பாடுகளுக்கு பெரும் காரணமாக அமைந்தது பவர் பாயிண்ட். இதனை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர் அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் ஆஸ்டின் (76). இவர் 1987ல் ஃபோர்தாட் நிறுவனத்தில் பணிபுரியும் போது, பவர் பாயிண்ட் LDG 1606 மென்பொருளை உருவாக்கினார்.

அதன் பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் 14 மில்லியன் டாலர்களுக்கு ஃபோர்தாட்-யை வாங்கியது. அதன் மூலம் பவர் பாயிண்ட் மிக வேகமான மற்றும் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் மென்பொருளாக அது மாறியது.

இந்நிலையில் ஓய்வுக்கு பின் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த டென்னிஸ் ஆஸ்டினுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்ததாக அவரது மகன் மைக்கேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours