அடுத்தடுத்த திக் திக் நிமிடங்கள்…இருளில் மூழ்கிய காசா நகரம்!

Spread the love

இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே 5 நாட்களாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுவரை, ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதலில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், காசாவை தொடர்ந்து லெபனான் மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல். இந்த போரில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போது, காசாவை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், காசா நகரில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

காசா நகரில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் மின்சாரம் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தற்பொழுது, இஸ்ரேல் ராணுவமானது அமெரிக்கா உதவியுடன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் காசாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் குழு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் படையினர் காசா பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதால் அங்கிருந்து சுமார் 2.5 லட்சம் பாலஸ்தீன மக்கள் காசா எல்லை பகுதியில் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours