கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இருநாடுகளிலும் 5000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் உணவு, நீர் இன்றி மிகவும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்; காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, காஸாவில் மருத்துவமனை தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்று, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசி, இஸ்ரேலுக்கு முழுமையாக அமெரிக்கா துணை நிற்கும் என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் இஸ்ரேல் மிதமான தாக்குதலையும் ஏற்க முடியாது.
இந்த ஆண்டிலிருந்து இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகப்படுத்தப்படும். இஸ்ரேலில் குறைந்தது 32 அமெரிக்கர்கள் உட்பட 1300 பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸின் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர் பிடிக்கப்பட்ட அமெரிக்கர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours