நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபரா வெற்றி .!

Spread the love

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டி இலங்கையில் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் முதலில் களமிறங்கிய நேபாளம் அணி 48.2 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து இருந்தது. இதில் அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 58 ரன்கள் எடுத்து இருந்தார். சோம்பால் கமி 48 ரன்களும், குஷால் புர்டெல் 38 ரன்களும், திபேந்திர சிங் ஐரி 29 ரன்களும், குல்சன் ஜா 23 ரன்களும் எடுத்து இருந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணி சார்பில் ஜடேஜா, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் , முகமது சமி, ஹர்திக் பாண்டியா , ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்து இருந்தனர்.

50 ஓவரில் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க இந்திய அணிக்கு கடந்த போட்டி போலவே இந்த போட்டியிலும் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக, டிஎல்எஸ் முறைப்படி 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முறையே 74 மற்றும் 67 ரன்கள் எடுத்து 20.1 ஓவரிலேயே 147 ரன்கள் எனும் வெற்றி இலக்கை தாண்டி இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours