இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க உள்ளதால், அமெரிக்கா ஒதுங்கி இருக்குமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 1-ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் இரு உயர் அதிகாரிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்
இதற்கு உரிய பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக தெரிவித்துள்ள ஈரான், ‘அமெரிக்கா ஒதுங்கி இருக்க வேண்டும்’ எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஈரானின் எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள அமெரிக்கா, தனது நிலைகள் மீது குறிவைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக, ஈரான் அதிபரின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது ஜம்ஷிதி X தளத்தில் பதிவு
+ There are no comments
Add yours