மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் குவைத் விசா !

Spread the love

குவைத் நாட்டின் பெயரை கேட்டாலே வலிமையான பண மதிப்பு தான் பலருக்கும் நினைவில் தோன்றும். இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமெனில் ஒரு குவைத் தினார் என்பது 270 ரூபாய்க்கு சமம். இதுதவிர எண்ணெய் வளம் மிகுந்த நாடாக திகழ்கிறது. மேலும் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு வசதிகளும் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

குவைத் நாட்டில் வெளிநாட்டு மக்கள்

இதுதொடர்பான பணிகளுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் குவைத் சென்று வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமான இருக்கிறது. இந்நாட்டின் மக்கள்தொகை 43 லட்சம். இதில் 30 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள் என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவலாக இருக்கிறது.

விசா நடைமுறைகள்

எனவே குவைத் நாட்டிற்கு செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும் நபர்கள் ஏராளம். இந்நாட்டில் வேலை செய்து வரும் வெளிநாட்டவர்கள் தங்களது குடும்பத்தை அழைத்து வருவதற்கு பார்வையாளர் விசாவை பயன்படுத்தி வந்தனர். இதற்கு திடீரென குவைத் அரசு தடை விதித்தது. பல மாதங்களாக அனுமதிக்கப்படவில்லை. இது பெரும் ஏமாற்றம் அளித்து வந்தது.

மீண்டும் பார்வையாளர் விசா

இந்நிலையில் பார்வையாளர் விசாவை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர குவைத் அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக சில வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்கள் 400 தினார்களுக்கு மேல் (ரூ.1 லட்சத்திற்கு மேல்) சம்பளம் வாங்குவோர் தங்களது பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோரை அழைத்து வரலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours