“OperationAjay” திட்டம் தொடக்கம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

Spread the love

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் 6-வது நாளாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே இதுவரை நான்கு முறை போர் நடந்துள்ளது. இந்த சமயத்தில் இந்த யுத்தம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.

தற்போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக ஹமாஸ் அமைப்பினர் போர் பிரகடனம் எடுத்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலை நடத்தியது. கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா எல்லை பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன.

“ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்” என்ற பெயரில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், “operation iron sword” என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் கடந்த 6 நாட்களாக நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் நகரங்களில் பூந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்று இஸ்ரேல் ராணுவமும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த தாக்குதலில் 3000 மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், தாக்குதலால் மக்கள் பதுங்கு குழியில் தஞ்சமடைந்து உள்ளனர். இந்த சமயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

இந்த அசாதாரண சூழலில் இஸ்ரேல் பிரதமரை, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து பேசினார். அதுமட்டுமில்லாமல், இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும், வெளியுறவு துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போரில் சுமார் 18,000 இந்தியர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த யுத்தத்தில் சிக்கிய 18,000 இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. மத்திய அரசு தொடங்கியுள்ள இந்த “ஆபரேஷன் அஜய்” திட்டத்தின் கீழ் இன்று சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் விஜய் தொடங்கப்படுகிறது. இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களுக்காக சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours