மக்களை பெருமை கொள்ள செய்வோம்- ட்ரம்ப் வெற்றி உரை

Spread the love

புளோரிடா: அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் உரையாற்றினார்.

“இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும். துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் அந்த பொறுப்புக்கு சரியான தேர்வு. நாட்டின் முதல் குடிமகள் ஆகவுள்ள என் மனைவி மெலானியாவுக்கு வாழ்த்துகள்.

இந்த தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய எலான் மஸ்குக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு ஜீனியஸ். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம் பொறுப்பு. அவரைப் போலவே தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம். ராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம்.

உலகத்தின் மிக முக்கிய பணி இது. அதன் காரணமாக தான் இறைவன் எனது உயிரை காத்தார் என நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என ட்ரம்ப் தனது வெற்றி உரையில் தெரிவித்தார்.

நம் நாட்டுக்கு கடுமையாக உழைக்கும் திறன் கொண்ட அதிபர் மீண்டும் கிடைத்துள்ளார் என டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். புளோரிடாவில் உள்ள மாநாட்டு மையத்தில் குடியரசுக் கட்சியின் நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், தன் குடும்பத்தினர் என அனைவருக்கும் மேடையில் இடம் கொடுத்திருந்தார் ட்ரம்ப். அவர் பேசி முடிக்கும் போதெல்லாம் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours