ரியாத்தில் நடைபெறும் யுனெஸ்கோ உலக பாரம்பரியக்குழு கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் அமைச்சர்களுக்கு விசா வழங்க சவுதி அரேபியா மறுப்பு தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் கூட்டம் சவுதி தலைநகர் ரியாத்தில் செப்டம்பர் 10 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் மற்றும் கல்வி அமைச்சர் யோவ் கிஷ் ஆகியோருக்கு விசா வழங்க சவுதி அரேபியா மறுத்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் சேனல் 13, இரண்டு அமைச்சர்களையும் அனுப்ப இஸ்ரேல் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் சவுதி அரேபியா தடைகளைப் போட்டு அவர்களுக்கு விசா வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அமெரிக்காவின் கோரிக்கையை அடுத்து, இரு அமைச்சர்களுக்கும் விசா பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் இருந்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் பின்வாங்கியுள்ளதாகவும் அது கூறியுள்ளது
இந்த மாநாட்டில் இஸ்ரேலிய வல்லுநர்கள் பங்கற்பார்கள் என்றும், ஆனால், அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சாத்தியமான இயல்புநிலை ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
+ There are no comments
Add yours