லிபியாவில் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் என்னிக்கை 11,300 ஆக அதிகரித்துள்ளது. 10,000க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியா, மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ளது. அந்தக் கடலில் உருவான டேனியல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லிபியாவைக் கடந்தது. அதன் காரணமாக அங்கு கன மழை கொட்டி தீர்த்தது. அதோடு, சூறாவளிப்புயலும் தாக்கியது. இதனால், அந்தப் பகுதியில் ஓடும் வாடி டொ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அணையில் இருந்து முழு கொள்ளளவு நீர் வெளியேற்றப்பட்டும் கூட, அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகள் உடைந்தன.
இதையடுத்து, வெள்ள நீா் அருகிலுள்ள டொ்ணா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் பாய்ந்தது. வாடி டொ்ணா உருவாகும் மலைப் பகுதிக்கும், அது மத்தியதரைக் கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கும் இடையே டொ்ணா நகரம் அமைந்துள்ளதால் அணை உடைந்து பாய்ந்து வந்த வெள்ள நீா் அந்த நகரிலிருந்த வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை கடலுக்கு அடித்துச் சென்றது.
இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11,300-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 10,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு லிபியாவில் சர்வாதிகாரி கடாஃபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் அங்கு, ஆயுதமேந்திய குழுக்களின் மோதல் தொடர்ந்து வருகிறது. நாட்டின் கிழக்கு, மேற்கு என இரு பிரிகளால் ஆளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டின் உள்கட்டமைப்புகளை சீரமைக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதுவே, வாடி டொ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைகள் தற்போது உடைந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
+ There are no comments
Add yours