தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர்..! இஸ்ரேல் செல்கிறார் ஜோ பைடன்..!

Spread the love

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே இன்று 11-வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி முதல் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹாமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இவர்களின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரையில் இந்த போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதுவரை 3.3 லட்சம் ராணுவ வீரர்களை காசா பகுதி எல்லையில் களமிறக்கியுள்ள நிலையில், வான்வெளி தாக்குதலை அடுத்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில், காஸாவை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காஸாவை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்; காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்ல உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமை வலியுறுத்த புதன் கிழமை (நாளை) நான் இஸ்ரேலுக்குச் செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours