திரும்பிய திசையெல்லாம் மூட்டை பூச்சி.. பிரான்ஸ் நாட்டில் மூட்டை பூச்சிகளின் படையெடுப்பால் அந்நாடு அல்லாடி கொண்டிருக்கிறது.
வரும் 2024ல் பாரிஸில் ஒலிம்பிக்கிற்கு மில்லியன் கணக்கானவர்கள் கலந்துகொள்ள இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான கால இடைவெளி உள்ள நிலையில், மூட்டைப்பூச்சி தொற்றுகள் பற்றிய அறிக்கைகளின் அலை பிரெஞ்சு அதிகாரிகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த வகை இரத்தம் உறிஞ்சும் மூட்டை பூச்சிகள் பாரிஸ் மெட்ரோ, அதிவேக ரயில்கள் மற்றும் பாரிஸின் சார்லஸ்-டி-கோல் விமான நிலையங்களில் காணப்படும் நிலையில், அதனால் வெறுப்படைந்த பயணிகள் அதனை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியிட்டனர்.
இதுகுறித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் கிளெமென்ட் பியூன் கூறுகையில், “இந்த வாரம் அவசர பொது கூட்டம் கூட்டி இந்த விவகாரம் தொடர்பாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.
1950 களில் அன்றாட வாழ்வில் இருந்து பெருமளவில் மறைந்துவிட்ட பூச்சிகள், சமீப காலமாக மீண்டும் அதிகரித்து தொல்லை கொடுத்து வருகின்றன. மூட்டைப்பூச்சிகள் மனித இரத்தத்தை உண்பதற்காக இரவில் வெளியே வருகின்றன.
மூட்டைப்பூச்சி கடித்தால் தோலில் சிவந்த பகுதிகள், கொப்புளங்கள் அல்லது பெரிய தடிப்புகள் ஏற்படுகின்றன, மேலும் தீவிர அரிப்பு அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். மேலும், மன உளைச்சல், தூக்கப் பிரச்சினைகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன.
கடந்த சில வருடங்களாக மூட்டைப்பூச்சிகளின் அதிகரிப்பால் பிரெஞ்சு குடும்பங்களில் பத்தில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பூச்சிக் கடிக்கான அறுவை சிகிச்சைக்கு பல நூறு யூரோக்கள் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரான்ஸின் தேசிய சுகாதார நிறுவனம், “மக்கள் பயணம் செய்யும் போது தங்களுடைய ஹோட்டல் படுக்கைகளை சரிபார்த்து, தங்கள் வீடுகளுக்குள் பயன்படுத்தப்படும் மரச்சாமான்கள் அல்லது மெத்தைகளை கொண்டு வருவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
ரத்தம் உறிஞ்சும் மூட்டைப்பூச்சிகளின் அதிகரிப்பை குறைத்து அவற்றை ஒழிக்க இந்த வாரம் அவசரக் கூட்டம் கூட்டப்பட்ட உள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours