தொடரும் ராணுவ உதவி.! ஏவுகணை பாதுக்காப்பு அமைப்புகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் அமெரிக்கா.!

Spread the love

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி , பதிலுக்கு இஸ்ரேல் , ஹமாஸ் அதிகம் இருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது, இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர் தொடங்கி 16 நாட்களாக தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருப்பது காஸாவில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் தான்.

இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலுக்கு, இஸ்ரேலுக்கு துணையாக அமெரிக்கா தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வருகிறது . ஏற்கனவே, போர் விமானங்கள், ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்க தற்போது தாட் (THAAD) எனப்படும் ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை அனுப்ப உள்ளது.

இது ஒரு கவச அமைப்பு, இந்த THAAD மூலம், தொலைவில் இருந்து வரும் வீரியமிக்க, வேகமான ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த முடியும். ஏற்கனவே இதே போல அயன் டோம் எனும் ஆயுதம் அமெரிக்காவால் வழங்கப்பட்டு இருந்தாலும், இந்த THAAD அதிக வீரியம் கொண்ட ஏவுகணைகளையும் தாக்கும் திறன் கொண்டது.

ஹமாஸ் ஆரம்பித்தது முதலே இஸ்ரேலுக்கு பல்வேறு ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா, ஏற்கனவே, மத்திய கிழக்கு பிராந்திய பகுதியில் போர் கப்பலை நிறுத்தியுள்ளது. இது போக, 2 ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் கசின்றன.

முன்னதாக எகிப்தில் நடைபெற்று முடிந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட அரபு நாட்டு தலைவர்கள் , இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் குறைந்தது 24 மணிநேரமாவது போரை நிறுத்த வேண்டும். ஹமாஸ் நகரில் பாலஸ்தீன மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க, அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours