தண்டவாளத்தில் படுத்திருந்த மூதாட்டி.. பாய்ந்து வந்த ரயில்..சேலத்தில் திக் திக் !

Spread the love

Indian Railway Finance Corporation Limited has joined the list of stocks that outperformed expectations in the stock market.
பங்குச் சந்தையில் எதிர்பார்ப்பை தாண்டி லாபம் அளித்த பங்குகளின் பட்டியலில் இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் பங்கு இணைந்துள்ளது.

சேலத்தில் ரயில் தண்டவாளத்தில் மூதாட்டி படுத்திருப்பதை கண்டு உடனடியாக ரயிலை நிறுத்திய லோகோ பைலட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. சேலத்தில் இருந்து எழும்பூருக்கும், எழும்பூரில் இருந்து சேலத்திற்கும், ஆத்தூர் மார்க்கமாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று எழும்பூரில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், சேலம் டவுன் ரயில் நிலையத்திற்கு இன்று காலை 6 மணி அளவில் வந்தது. பின்னர் சேலம் ஜங்ஷன் மார்கமாக புறப்பட்ட ரயில், டவுன் ரயில் நிலையத்திற்கும் சத்திரத்துக்கும் இடைப்பட்ட பகுதி அருகே பயணித்துக் கொண்டிருந்தது.

அப்போது தண்டவாளத்தில் ஒரு மூதாட்டி படுத்திருப்பதை பார்த்ததும் ரயிலை ஓட்டிச் சென்ற லோகோ பைலட் அதிர்ச்சி அடைந்தார்.

சமயோசிதமாக சிந்தித்த அவர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் தண்டவாளத்தில் மூதாட்டி படுத்து இருந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் முன்பாகவே ரயில் நின்றது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு லோகோ பைலட் தகவல் அளித்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸுடன் வந்த ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தில் படுத்திருந்த மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த மூதாட்டி யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொள்ளும் நோக்கோடு தண்டவாளத்தில் படுத்திருந்தாரா? என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மூதாட்டி தண்டவாளத்தில் படுத்திருப்பதை கண்டவுடன், ரயிலை நிறுத்திய லோகோ பைலட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் காரணமாக ரயில் அரை மணி நேரம் தாமதமாக கிளம்பிச்சென்றது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours