புதிய கட்டணங்களுடன் சொமாட்டோ!

Spread the love

முன்னணி உணவு விநியோக சேவையாளரான சொமாட்டோ, கூடுதல் கட்டணங்களுடன் புதிய சேவைகளை அறிமுகம் செய்வதோடு, தன்னுடைய பழைய கட்டணங்களை உயர்த்தியும் அறிவித்துள்ளது.

அண்மையில் சொமாட்டோ நிறுவனம் தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதன்படி ஆர்டர் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த மாற்றம் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் அமலாகிறது.

பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணத்திற்கு மேல் கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணமாகும். தொடக்கத்தில், சொமாட்டோ இந்த கட்டணத்தை ஆகஸ்ட் 2023-ல் 2 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது; அதுவே பின்னர் அக்டோபரில் 3 ரூபாயாகவும், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 4 ரூபாயாகவும் உயர்த்தி வந்துள்ளது.

சொமாட்டோவின் போட்டியாளரான ’ஸ்விக்கி’ நிறுவனம் பிளாட்ஃபார்ம் கட்டணமாக 5 ரூபாய் வசூலித்து வருகிறது. இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம் ஆர்டரின் மொத்தத் தொகையைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு ஆர்டருக்கும் விதிக்கப்படும் நிலையான கட்டணமாகும்.

சொமாட்டோவிற்கு தனி டெலிவரி கட்டணம் இருந்தாலும், தள்ளுபடிகள் மற்றும் இலவச டெலிவரி வழங்கும் லாயல்டி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ’சொமாட்டோ கோல்ட்’ உறுப்பினர்களும், இந்த புதிய பிளாட்ஃபார்ம் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதாகிறது.

கட்டண உயர்வுக்கு அப்பால், சொமாட்டோ அதன் இன்டர்சிட்டி டெலிவரி சேவையான ’லெஜெண்ட்ஸ்’ என்பதிலும் மாற்றங்களை கொண்டு வருகிறது. 2022-ல் தொடங்கப்பட்ட லெஜெண்ட்ஸ், குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அடுத்தநாள் உணவு டெலிவரியை இதன் மூலம் உறுதியளித்தது.

ஆனால் முன்கூட்டியே இருப்பு வைத்தவற்றை டெலிவரி செய்ததில் சர்ச்சைக்கு ஆளானது. தற்போதைக்கு ​இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், இதையே திருத்தி புதிய வடிவில் கவர்ச்சிகரமான மாற்றங்களுடன் அறிவிக்க சொமாட்டோ காத்திருக்கிறது. இந்த வகையில் சொமாட்டோ லெஜண்ட்ஸை கூடுதல் கட்டணத்துடன் விரைவில் எதிர்பார்க்கலாம்.

இவற்றின் மத்தியில் ’பிரையாரிட்டி டெலிவரி’ என்ற பெயரில் கூடுதல் கட்டணம் செலுத்தினால், முன்னுரிமை சேவையாக விரைந்து டெலிவரி செய்யும் பரிசோதனை திட்டத்தையும் சொமாட்டோ கொண்டு வருகிறது. எத்தகைய தாமதத்துக்கும் வாய்ப்பாகும் டெலிவரிகளையும் விரைந்து பெற இந்த பிரையாரிட்டி டெலிவரி சேவை உதவும். மும்பை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில் இந்த முன்னுரிமை சேவை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதர நகரங்களுக்கும் இந்த சேவையை எதிர்பார்க்கலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours