நன்கு பழுத்த வாழைப்பழம், கோதுமை ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து சுவையான ஸ்நாக்ஸ் எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க.
பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம் – சிறிய பழம் எனில் 6 ; பெரிய பழம் எனில் 3
கோதுமை மாவு- 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் வாழைப் பழத்தின் தோலை உரித்து பழத்தை எடுத்துகொள்ள வேண்டும். அதனை மிக்ஸி ஜாரில் போட்ட பின் அதனுடன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த வாழைப்பழம், கோதுமை மாவு, பேக்கிங் சோடா, ஏலக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான வாழைப் பழம் போண்டா ரெடி. குழந்தைகளும் இதை மிகவும் விரும்பி உண்வார்கள். அவர்களுக்கு இது ஹெல்த்தியான ஈவ்னிங் ஸ்நாக்ஸாக இருக்கும்.
+ There are no comments
Add yours