இந்தியாவில் அழகு பராமரிப்பும், ஆயுர்வேதமும் எப்போதும் இணைந்து இருக்கின்றன. சந்தையில் ஏராளமான தோல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், நம்மில் பலர் பழமையான வீட்டு வைத்தியத்தை தான் விரும்புகிறோம்.
நீங்களே வீட்டில் சொந்தமாக ஆயுர்வேத பாடி வாஷ் எப்படி செய்யலாம் என்பது இங்கே.
பாடி வாஷ் இல்லாமல் ஒரு குளியல் முழுமையடையாது. இது சருமத்தின் துர்நாற்றத்தைத் தடுத்து, ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. யோகா நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஹன்சாஜி யோகேந்திரா, பின்வரும் செய்முறையை உங்கள் குளியல் வழக்கத்தில் இணைக்குமாறு பரிந்துரைக்கிறார்.
எப்படி செய்வது?
2 டீஸ்பூன் கடலை மாவு (பேசன்) மற்றும் 2 டீஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறுடன் சேர்த்து புத்துணர்ச்சியூட்டும் பாடி வாஷ் தயார் செய்யவும்.
பலன்கள்
கடலை மாவு சருமத்தை மென்மையாக சுத்தப்படுத்துகிறது, இயற்கை எண்ணெய்களை அகற்றாமல் அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. தயிர் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் மென்மையாக்குகிறது, அதே நேரத்தில் எலுமிச்சை சாறு புத்துணர்ச்சியூட்டுகிறது.
+ There are no comments
Add yours