வெயில் காலம் துவங்க உள்ளதால், நாம் அனைவரருக்கும் மாம்பழம் மற்றும் மாங்காய் பற்றிய நினைவுகள் வரும். இந்நிலையில் நாம் பச்சை மாங்காய்யை தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை தெரிந்துகொள்வோம்.
பச்சை மாங்காயில் மகிஃபரின் என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்த அழுத்தம் ஏற்படாமல் பார்த்துகொள்ளும். மேலும் இது ரத்த குழாய்களில் ரத்தம் உறையாமல் இருக்கவும், ரத்த குழாய்களின் சுருங்கி விரியும் தன்மைக்கு உதவுகிறது.
இதில் உள்ள அதிக கரோட்டினாய்டு நமது பார்வை திறனை அதிகரிக்கும், மேலும் கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பற்கள் ஈருகளில் ரத்த கசிவு உள்ளிட்ட சிக்கலை இது ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.
இதில் உள்ள அதிக நார்சத்து, அஜீரணம் ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.
+ There are no comments
Add yours