உடல் எடையை குறைப்பதற்காக, இரவு உணவை தவிர்த்தால், பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதாவது, இரவு உணவை தவிர்ப்பது குறுகிய கால பலன்களை கொடுத்தாலும், அது நீண்ட காலத்திற்கு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளையும் கொடுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
குறிப்பாக, உடல் மெட்டாபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பசி மற்றும் ஆசைகளையும் அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர்.
மேலும், நுண்ணூட்டச் சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். அத்துடன், தூக்கமின்மை, உடல் சக்தி குறைபாடு போன்றவையும் ஏற்படும் என்கிறார்கள்.
தொடர்ந்து, சரியான இடைவெளியில், சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியான முறையில் சுரப்பதோடு, தேவையற்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதையும் தவிர்க்கிறது என்கிறார்கள்.
எனவே, உடல் எடையை குறைக்க, மருத்துவர்களின் உரிய ஆலோசனைகள் இன்றி, நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடுகள், குறுகிய காலத்தில் பலன்களை கொடுத்தாலும், அது நீண்ட காலத்திற்கு பிரச்சனையை கொடுக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
+ There are no comments
Add yours