கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த குழந்தை.

Spread the love

பொதுவாக இரண்டு தலைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தைகளை பார்த்து இருக்கிறோம். மேலும் கை, கால் இல்லாமல் பிறந்த குழந்தைகள் பற்றியும் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் கர்நாடகத்தில் 25 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் பின்வருமாறு:-

பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. அதாவது வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது. இதை பார்த்து டாக்டர்களும், பாரதி மற்றும் அவரது குடும்பத்தினரும் ஆச்சரியம் அடைந்தனர். இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், “பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை” என்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours