கருவாடு மீனை உப்பிலிட்டு உலர்த்தி எடுப்பதால் கிடைப்பது. மீன் விரும்பி சாப்பிடும் நிறைய பேருக்கு கூட கருவாடு பிடிக்காது. ஆனால் சிலர் கருவாடை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் கருவாடை எந்த முறையில் எடுத்துக் கொண்டால் உடல் எடையைக் குறைக்க உதவி யாக இருக்கும் என்று பார்க்கலாம்.
கருவாடு ஏற்கனவே காய்ந்து போயிருக்கிறது. அதில் சத்துக்கள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மற்ற எல்லா மாமிசங்களையும் விட, மீனையும் விட அதிக அளவு கருவாட்டில் தான் புரதங்கள் இருக்கிறதாம்.
ஆம். வெறும் 100 கிராம் அளவு கருவாட்டில் இருந்து எந்த மீன் வகை என்பதை பொருத்து 60 கிராம் முதல் 70 கிராம் வரைக்கும் புரதங்கள் இருக்கிறது.
கருவாடு உலர்ந்த நிலையில் தானே இருக்கிறது. அதில் கொழுப்பு இருக்குமா என்று கேட்கலாம்.
கருவாட்டிலும் கொழுப்புச் சத்து இருக்கிறது. 100 கிராம் கருவாட்டில் 2 முதல் 5 கிராம் வரைக்கும் கொழுப்பு இருக்கிறது. அதுவும் ஒமேகா 3 போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் தான் இருக்கின்றன.
மற்ற இறைச்சிகளை விட இதில் கலோரிகளின் அளவிலும் மிதமான அளவில் தான் இருக்கிறது.
100 கிராம் கருவாட்டில் 300 கலோரிகள் இருக்கின்றன. அந்த 300 கலோரிகளில் முக்கால் வாசி பங்கு புரதத்தால் கிடைப்பது. அதனால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவு தான் கருவாடு. அதனால் கட்டாயமாக நீங்கள் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும்போது கருவாடை சாப்பிடலாம்.
கருவாடை டயட்டில் சேர்ப்பதன் மூலம் இரண்டு சிறிய அளவிலான சிகக்ல்கள் இருக்கின்றன.
- உப்பு – கருவாட்டில் உப்பு அதிகமாக இருக்கும். அது உங்களுக்கே தெரியும். 100 கிராம் கருவாட்டில் 7000 mg அளவுக்கு சோடியம் இருக்கிறது. ஆனால் நமக்கு ஒரு நாளைக்கு 2000 – 3500 mg அளவு தான் தேவைப்படும். கருவாட்டில் சோடியம் அளவு மிக அதிகம் தான்.
2.பொட்டாசியமும் அதிகம். 100 கிராம் கருவாட்டில் 1400 mg இருக்கிறது. ஆனால் ஒரு நாளைக்கு 2000 – 3500 mg தான் தேவை. அவை நம்முடைய மற்ற உணவுகளில் இருந்தும் கிடைக்கும்.
உடல் எடையைக் குறை்பதற்கு கருவாட்டை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நல்ல சாய்ஸ் தான். அதேசமயம் சோடியத்தை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சோடியத்தின் அளவைக் குறைத்துவிட்டு சாப்பிடலாம். சிலர் வெந்நீரில் போட்டு கழுவிவிட்டு உடனே சமைப்பார்கள்.
அதனால் கருவாடு சாப்பிடுவதாக இருந்தால் 12 மணி நேரம் சாதாரண குளிர்ந்த நீரில் கருவாடை போட்டு வைத்து விட்டு பிறகு, கழுவிவிட்டு சமைத்தால் சோடியத்தின் அளவு குறைந்து விடும்.
அதேபோல வாரத்தில் 2 நாள் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 100 – 150 கிராமை விட அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றபடி உங்க டயட்டில் கருவாடை வைத்து சூப்பராக எடையைக் குறைக்கலாம்.
+ There are no comments
Add yours