காராமணியை நாம் அதிகமாக சமைத்து சாப்பிடுவதில்லை, இந்நிலையில் இதில் புரத சத்து, நார்சத்து, உள்ளது. மேலும் இதில் முக்கிய சத்துகள் உள்ளது.
100 கிராம் காராமணில் உள்ள சத்துகளை நாம் தெரிந்துகொள்ளலாம். 120 கலோரிகள், கார்போஹைட்ரேட் 21.45 கிராம், நார்சத்து 6.7 கிராம், சர்க்கரை 4.4 கிராம், புரத சத்து 8.3 கிராம், கொழுப்பு சத்து 0.9 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி -காம்பிளக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மெக்னீஷியம், காப்பர், மான்கனீஸ் உள்ளது.
ஆன்டி ஆக்ஸிடண்ட் பாலிபினால்ஸ், பிளபாய்ட்ஸ், டன்னின்ஸ் உள்ளது இவை நமது செல்களை சேதமடையாமல் பார்த்துகொள்ளும்.
இதில் உள்ள கரையக்கூடிய நார்சத்து, கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை குறைக்கும். இதில் உள்ள பொட்டாஷியம், ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
நார்சத்து, நமது ஜீரணத்தை அதிகரிக்க உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்குகிறது. குடல் ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கிறது. இதில் குறைந்த கொழுப்பு சத்து மற்றும் கலோரிகள் உள்ளது. அதிக புரத சத்து, நார்சத்து உள்ளதால், உடல் எடை குறைக்க உதவும்.
இதில் உள்ள நார்சத்து, சர்க்கரையை உள்வாங்கிக்கொள்ளும். சர்க்கரை அளவை சீராக்கும். இதனால் அடிக்கடி ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் எலும்புகளை வலுவாக்க உதவும். எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.
+ There are no comments
Add yours