வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா? இதை செய்யுங்க!

Spread the love

கோடைக்காலத்தில், பூச்சிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகரிக்கமாக இருக்கும்.

கரப்பான் பூச்சிகள் பல இடங்களில், குறிப்பாக சிங்கில், கிட்சன் மேடைகளில் அதிகமாக உலா வரும்.

இந்த கரப்பான் பூச்சியிலிருந்து விடுபட பல விஷயங்களை செய்தாலும் ஒழிந்த பாடில்லை என பொலம்புகிறீர்கள் எனில் உங்களுக்காகவே சில டிப்ஸ்.

கரப்பான் பூச்சிகள் தானே என அலட்சியமாக விடுவதும் தவறு. ஏனெனில் அவைதான் நம் வீட்டில் நோய்களை பரப்பும் கிருமிகளாகவும் செயல்படுகின்றன. எனவே அவற்றை அவ்வப்போதே ஒழித்துவிடுவது அவசியம்.

போரிக் அமிலம் மூலம் கரப்பான் பூச்சிகளை எளிதில் விரட்டலாம். போரிக் அமிலம் சந்தையில் எளிதில் கிடைக்கிறது. இதற்கு போரிக் பவுடரை எடுத்து அரிசி மாவில் கலந்து மாத்திரைகள் போல் உருட்டிக்கொள்ளவும். பிறகு கரப்பான் பூச்சிகள் வரும் இடத்தில் இந்த மாத்திரைகளை போடவும். இப்படி செய்தால் கரப்பான் பூச்சிகள் அனைத்தும் ஓடிவிடும்.

கரப்பான் பூச்சிகளை விரட்ட பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடா வீட்டில் எளிதாகக் கிடைக்கும். இதற்கு பேக்கிங் சோடாவை எடுத்து சர்க்கரையுடன் கலந்து பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் தடவவும். இப்படி செய்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

சிங்க் குழாய் செல்லும் இடங்கள், ட்ரெய்னேஜ் குழாய்கள் செல்லும் வழிகள் மூலம் கரப்பான் பூச்சிகள் அதிகமாக வரும். அந்த இடங்களை சுற்றிலும் வினிகரை ஊற்றிவிட அவை வரவே வராது.

எலுமிச்சை மற்றும் சோடா பேஸ்ட் உங்களுக்கு உதவும். இந்த இரண்டு பொருட்களையும் கலந்து பேஸ்ட் போல் தயாரிக்கவும். பின்னர் இந்த பேஸ்ட்டை சமையலறையில் எல்லா இடங்களிலும் தடவவும். இப்படி செய்தால் கரப்பான் பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours