கோவை கல்லூரி மாணவர் 39 நிமிடங்கள் 41 வினாடிகளில் 140 தேங்காய் சார்ந்த உணவுகள் தயாரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை படைத்துள்ளார்.
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேலாண்மை இறுதியாண்டு படிக்கும் மாணவர் ரூபன்ராஜ், 39 நிமிடங்கள் 41 நொடி நேரத்தில் 140 தேங்காய் சார்ந்த உணவுகள் தயாரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ மற்றும் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை படைத்தார்.
கல்லூரியின் அதிநவீன சமையல் ஸ்டுடியோவில் இந்த நிகழ்வு நடை பெற்றது. அங்கு ரூபன்ராஜுக்கு முழு வசதியுடன் கூடிய சமையலறை மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
இன்று காலை 10:45 மணி முதல் உணவுகளைத் தயாரிக்க தொடங்கிய மாணவர், காலை 11:24 மணிக்கு தேங்காயைப் பயன்படுத்தி இனிப்புகள், சாலடுகள், சூடான மற்றும் குளிர் பானங்கள், வேகவைத்த உணவுகள், அரிசி வகைகள், குழம்பு உணவுகள், சட்னி, தோசை என மொத்தம் 140 வகையான உணவுகளை 39 நிமிடங்கள் 41 வினாடி நேரத்தில் தயார் செய்து சாதனை படைத்தார்.
இந்நிகழ்வின் போது கல்லூரியின் முதல்வர் வி.ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட், கேட்டரிங் துறையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடன் இருந்து உற்சாக படுத்தினர். சங்கரா நிறுவன வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது என்பது குறிப்பிடதக்கது.
+ There are no comments
Add yours