தேங்காய் சேர்ந்த கேரட் லட்டு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேரட்- 3
தேங்காய்- 1கப் (துருவியது)
சர்க்கரை- 250 கிராம்
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
பால் பவுடர்- 100 கிராம்
மெலன் – ஒரு ஸ்பூன்
நெய்- 1 ஸ்பூன்
செய்முறை
கேரட்டை சுத்தம் செய்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை கடாயில் வைத்து நெய் சேர்த்து அதில் துருவிய கேரட் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சர்க்கரை உருகி கேரட் வெந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.
பின்னர் அதில் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை சற்று கெட்டியாகி வந்தவுடன் கிளறி இறக்க வேண்டும். பின்னர் சற்று ஆற வைத்து லட்டுக்களாக பிடித்து எடுத்தால் சுவையான தேங்காய் கேரட் லட்டு ரெடி.
+ There are no comments
Add yours