ஜவ்வரிசி தோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி- ஒன்றரை கப்
ஜவ்வரிசி – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 4
கடுகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை: அரிசி கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஜவ்வரிசியைக் கழுவி, 4 மணி நேரம் தயிரில் ஊறவைக்கவும், வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். முதலில் அரிசியை அரைக்கவும். பின் ஜவ்வரிசியையும் அரைத்து எடுக்கவும், வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சுடு வந்ததும் கடுகு தாளித்த பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு உப்பு சேர்த்து மாவில் கலந்து ரவா தோசை போல் ஊற்றி இருபுறமும் மொறுமொறுவென வேகவைத்து எடுக்கவும்.
+ There are no comments
Add yours