சுவை, ஆரோக்கியமான மிளகு அடை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 1 கப்
பச்சரிசி – 1/2 கப்
கருப்பு உளுந்து– 1/4 கப்
மிளகுத் தூள் – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 1 கப்
கறிவேப்பிலை – 20 இலைகள்
தேங்காய்த் துருவல் – 1 கப்
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கருப்பு உளுந்தம் பருப்பை எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தைச் சேர்த்து கழுவி, 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டவும். மிக்ஸி ஜாரில் வடிகட்டிய அரிசி மற்றும் உளுந்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். மேலும் 1.5 கப் தண்ணீர் விட்டு கலக்கவும். அரைத்த மாவில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
இப்போது தோசைக் கல் அடுப்பில் வைத்து சூடானதும் தயாரித்து வைத்த மாவில் தோசை ஊற்றவும். எண்ணெய் சுற்றி ஊற்றி வேக வைத்து பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான மிளகு அடை தோசை ரெடி.
+ There are no comments
Add yours