கொசு உங்களை மட்டும் குறி வைச்சு கடிக்குதா.. ஏன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க !

Spread the love

மழைக்காலம் என்பதால் வீட்டைச் சுற்றி ஆங்காங்கு நீர் தேங்கியிருக்கும். இதனால் கொசுக்கள் அந்நீரில் இனப்பெருக்கம் செய்து, படையெடுத்து மனிதர்களைத் தாக்கும் கொசுக்களில் ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து தேனை உட்கொள்கின்றன. அதே சமயம் பெண் கொசுக்கள் மனிதர்களின் இரத்தத்தை உணவாக உட்கொள்கின்றன.

மனித இரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட வகையான புரோட்டீன்கள் மூலம் கொசுக்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, கொசுவின் எச்சில் மனித இரத்தத்தில் உட்செலுத்தப்படுகிறது. இப்படி உட்செலுத்துவதனால் தான் கொசுக்கள் மூலம், மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜிக்கா வைரஸ் போன்ற நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன.

இவற்றில் சில வகையான நோய்த்தொற்றுகள் பெரிய தொற்றுநோயை தூண்டக்கூடிய வகையில் ஆபத்தானவை. ஏன் இந்த கொசுக்களினால் பரவும் தொற்றுநோய்களால் மில்லியன் கணக்கானோர் இறந்துள்ளனர். இவ்வளவு ஆபத்தான கொசுக்கள் ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டும் அதிகம் கடிப்பதை நீங்கள் காணலாம். இப்படி கொசுக்கள் ஒரு சிலரை மட்டும் அதிகம் கடிக்க எதுவெல்லாம் காரணமாக இருக்கக்கூடும் என்பதைக் காண்போம்.

  1. உடைகள் கொசுக்கள் வெளிர் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்களை விட அடர் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்களையே அதிகம் கடிக்கும். அதோடு, கை, கால்கள் நன்கு தெரியும்படியான ஆடைகளை அணியும் போது, கொசுக்கள் இன்னும் அதிகமாக கடிக்கும். கொசுக்களில் ஏடிஸ் வகை கொசுக்கள் தான் டெங்கு ஏற்பட காரணமானவை. இந்த வகை கொசுக்கள் பெரும்பாலும் கால்களை கடிக்காமல் கைகளையே கடிக்கும். அதேப் போல் மலேரியாவை உண்டாக்கும் அனோபிலிஸ் வகை கொசுக்கள் கால்களையே குறி வைத்து கடிக்கும். எனவே மழைக்காலத்தில் முழுக்கை மற்றும் முழுக்கால் ஆடைகளை அணியுங்கள் மற்றும் வெளிர் நிற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள்.
  2. இரத்த வகை கொசுக்கள் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த பிரிவினரை அதிகம் கடிப்பதாக போதுமான அறிவியல் தரவுகள் உள்ளன. குறிப்பாக மற்ற இரத்த பிரிவினருடன் ஒப்பிடுகையில் ‘O’ வகை இரத்த பிரிவினரை கொசுக்கள் அதிகமாக கடிக்கும். ஏனெனில் இந்த வகையில் இரத்த பிரிவினரின் தோலில் கொசுக்களை ஈர்க்கும் கெமிக்கல்கள் அதிகம் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.
  3. உடல் வெப்பம் பெண் கொசுக்களில் உள்ள ஆண்டெனாக்கள் வெப்ப உணர்திறனைக் கொண்டவை. இந்த பெண் கொசுக்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவான வெப்பநிலையை எளிதில் கண்டறிய முடியும். எனவே சூடான உடல் வெப்பநிலையைக் கொண்டவர்களை கொசுக்களை அதிகம் கடிக்கும் வாய்ப்புள்ளது. அதோடு உடல் பருமன் உள்ளவர்கள் அல்லது அதிக மெட்டபாலிசத்தைக் கொண்டவர்களை பெண் கொசுக்கள் அதிகம் கடிக்கும்.
  4. கார்பன்-டை-ஆக்ஸைடை அதிகம் வெளியிடுபவர் கொசுக்களின் ஆண்டெனாக்கள் காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவிற்கும் உணர்திறன் கொண்டவை. எனவே அதிக மெட்டபாலிசம் கொண்டவர்கள் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடை அதிகம் வெளியிடுபவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும். அதாவது, வேகமாக மூச்சுவிடுபவர்கள், அதிகமாக வியர்ப்பவர்கள் போன்றோரை கொசுக்கள் அதிகமாக கடிக்கும்.
  5. ஆல்கஹால் அருந்துவது மது அருந்துவதனால், உடல் வெப்பம் அதிகரிப்பதாடு, உடலின் மெட்டபாலிசமும், வியர்வையும் அதிகரிக்கிறது. இவை அனைத்தும் பெண் கொசுக்களை ஈர்க்கும் காரணிகளாகும். எனவே கொசுக்கள் கடிக்காமல் இருக்க வேண்டுமானால் மது அருந்துவதை நிறுத்துங்கள். இப்படி நிறுத்துவதன் மூலம் கொசுக்கள் கடிப்பது தடுக்கப்படுவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்

Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours