சுவை, மிருதுவான கேரளா ஸ்டைல் மில்க் கேக் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் பவுடர்- 1 கப்
மைதா- ஒன்றரை கப்
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா- 1 ஸ்பூன்
உப்பு- 1 டீஸ்பூன்
சர்க்கரை- 1 கப்
பால்- 200 கிராம்
நெய்- 2 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரம் எடுத்து அதில் பால் பவுடர், மைதா எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் ஏலக்காய் தூள், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து ஒன்றாக பிசையவும்.
பின்னர் அதில் நெய், பால் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
இந்த மாவினை சப்பாத்தி போல் திரட்டி அதனை சதுர சதுரமாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து கடாயில்
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள கேக்குகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து வைக்கவும்.
இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்ச வேண்டும். இதன் பின் பாகு பதம் வந்தவுடன், நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பால் கேக்குகள் மீது இந்த ஜீராவை ஊற்றி சாப்பிட்டால் சுவை அள்ளும்.
+ There are no comments
Add yours