சருமத்திற்கு அரிசி நீரைப் பயன்படுத்துவது முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கும், தடுப்பதற்கும், முகப்பரு தழும்புகளை அகற்றுவதற்கும், ஹைப்பர் பிக்மென்டேஷனில் இருந்து விடுபடுவதற்கும் ஒரு இயற்கை வீட்டு தீர்வாகும்.
அரிசி நீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் பி, ஈ மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை செல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன, ரத்த ஓட்டத்தைத் தூண்டுகின்றன.
ரைஸ் வாட்டர் கியூப்ஸ்
நீங்கள் மதிய உணவிற்கு சாதம் சமைக்கும் போது இந்த ஐஸ் கட்டிகளை தயாரிக்கலாம். அசுத்தங்களை அகற்ற அரிசியை நன்கு கழுவவும், பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டு, இரண்டு மடங்கு தண்ணீரை சேர்த்து 2-3 மணி நேரம் மூடி வைக்கவும்.
பிறகு அரிசி தண்ணீரை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைக்கவும், இப்போது ஐஸ் கியூப்ஸ் எடுத்து அது உருகும் வரை உங்கள் முகம் முழுவதும் ஐஸ் தடவவும். உங்கள் முகத்தை துடைக்க வேண்டாம், காற்றில் உலரட்டும், இதன் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கும்.
டார்க் பேட்சஸ் நீங்க
முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுகளை போக்க அல்லது கூடுதல் நிறத்துக்கு, அரிசி நீரை பயன்படுத்தலாம் அல்லது அரிசிப் பொடியை பச்சைப் பாலுடன் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கலாம்.
இந்த பேஸ்ட்டை உங்கள் முகம், கழுத்து பகுதிகளில் தடவி, சில நிமிடங்கள் விட்டு, பிறகு சுத்தமான நீரில் கழுவவும். சிறந்த முடிவுகளை அடைய வாரத்திற்கு ஒரு முறை மீண்டும் செய்யவும்.
அரிசி தண்ணீர்’ சருமத்தில் உள்ள கொலாஜனை அதிகரிக்கிறது, இது உங்கள் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கிறது மற்றும் சுருக்கங்களை தடுக்க உதவுகிறது.
+ There are no comments
Add yours