அரிசி மாவு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது, இறந்த சரும செல்களை நீக்குகிறது, துளைகளை அவிழ்த்து, சரும அமைப்பை மேம்படுத்துகிறது.
கடந்த சில ஆண்டுகளில், கொரியன் பியூட்டி டிரெண்டுகளால் நம் இணையம் நிரம்பி வழிகிறது. அப்படி புதிய பியூட்டி, டிரெண்ட் ஆகும்போது, அதை முயற்சிக்க நாம் விரும்புகிறோம், இல்லையா?
இங்கு பியூட்டி இன்ஃபுளூயன்சர் நிருதி எஸ், கண்ணாடி போன்ற மின்னும் முகத்துக்கு உறுதியளிக்கும், வைரல் கொரியன் அரிசி மாவு ஃபேஸ் மாஸ்க் செய்முறையைப் பகிர்ந்துள்ளார்.
“நான் கடந்த இரண்டு வாரங்களாக கண்ணாடி தோலுக்கான வைரல் கொரியன் ஃபேஸ் மாஸ்க் முயற்சித்து வருகிறேன், அதன் முடிவுகள் பிரமிக்க வைக்கின்றன. உங்களுக்கு இரண்டு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு டேபிள்ஸ்பூன் தயிர் அல்லது பச்சை பால் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் தேவை. அதை நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவவும். 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு கழுவவும். இரண்டே வாரங்களில் வித்தியாசத்தை நீங்கள் காணலாம்,” என்று அவர் கூறினார்.
இந்த தீர்வு உண்மையிலேயே வேலை செய்கிறதா என்பதை கண்டுபிடிக்க நாங்கள் நிபுணர்களை அணுகினோம்.
டாக்டர் டிஎம் மகாஜன் (senior consultant, dermatology, Indraprastha Apollo Hospital, Delhi), அரிசி மாவு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றால் செய்யப்பட்ட வைரல் மாஸ்க் பல்வேறு சரும நன்மைகளைக் கொண்டுள்ளது, என்றார்.
“அரிசி மாவு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது, இறந்த சரும செல்களை நீக்குகிறது, துளைகளை அவிழ்த்து, சரும அமைப்பை மேம்படுத்துகிறது.
மறுபுறம் லாக்டிக் அமிலத்தை உள்ளடக்கிய தயிர், மென்மையான எக்ஸ்ஃபோலியேஷன் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை அகற்ற உதவுகிறது. மேலும், தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டி, இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, நீரேற்றமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது, ”என்று அவர் குறிப்பிட்டார்.
கூடுதலாக, டாக்டர் ஹென்னா ஷர்மா (consultant dermatology, Yatharth Hospital, Noida Extension), இது எண்ணெய் சரும வகைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
வைரல் மாஸ்க் எண்ணெய்த் தன்மையை திறம்பட குறைத்து, முகத்தை பிரகாசமாக்குகிறது. இது எரிச்சல் மற்றும் சிவப்பையும் தணிக்கிறது, அமைதியான விளைவை அளிக்கிறது. ஆண்டிமைக்ரோபியல் மற்றும் லாக்டிக் அமில உள்ளடக்கத்துடன், இந்த ஃபேஸ் மாஸ்க் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கக்கூடும், என்று அவர் மேலும் கூறினார்.
அதன் சாத்தியமான நன்மைகள் இருந்தபோதிலும், தோல் மருத்துவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்துகிறார்கள்.
அரிசி மாவின் எக்ஸ்ஃபாலியேட்டிங் பண்புகள் மற்றும் தயிரின் அமிலத்தன்மை சில தோல் வகைகளுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கலாம், என்று டாக்டர் மகாஜன் கூறினார். தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் அவசியம், குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு.
ஆரோக்கியமான சருமத்திற்கு, குறிப்பாக நீரேற்றம், எக்ஸ்ஃபாலியேட்டிங் மற்றும் எண்ணெய் கட்டுப்பாடு போன்றவற்றிற்கு ஃபேஸ் மாஸ்க் சில நன்மைகளை வழங்க முடியும் என்றாலும், இது தொழில்முறை தோல் சிகிச்சைகள், நிலையான தோல் பராமரிப்பு மற்றும் சரியான ஊட்டச்சத்து ஆகியவற்றிற்கு மாற்றாக இல்லை, தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கு தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு டாக்டர் ஷர்மா பரிந்துரைத்தார்.
+ There are no comments
Add yours