லேடீஸ் பிங்கர்ஸ் என்றழைக்கப்படும் வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
இது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் உள்ள ஊட்டசத்துகள் காரணமாக நம்முடைய டயட்டில் இதையும் சேர்த்துக்கொள்வது நல்லது.
மேலும், வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.வெண்டைக்காய் ஊற வைத்த நீரை பருகுவதன் மூலம், இது மலமிளக்கியாக செயல்பட்டு சீரான இடைவெளியில் மலம் கழிவதற்கு வழிவகை செய்கிறது.
செய்வது எப்படி?ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் வெண்டைக்காய் துண்டுகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த நீரை குடிக்கவும்.மேலும் வெண்டைக்காய் சாறு நீரிழிவு பிரச்னைக்கும் நல்ல மருந்தாக கருதப்படுகிறது.
+ There are no comments
Add yours