அவல் தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1 கப்
அவல்-1 கப்
உளுந்தம் பருப்பு- 1/4 கப்
வெந்தயம்- 1 டீஸ்பூன்
தயிர்- 1 கப்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, அவல் சேர்த்து நன்கு கழுவி ஊற வைக்கவும். 1 மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஊற வைத்த அவல், பச்சரிசி, பச்சை மிளகாய் மற்றும் மோர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து கலக்கவும். அடுத்து மாவில் தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.
அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து தோசைக் கல் வைத்து சூடானதும் அதில் நாம் தயாரித்து வைத்த மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான அவல் தோசை தயார்.
+ There are no comments
Add yours