நீங்கள் அடிக்கடி வேகவைத்த முட்டைகளை சாப்பிடுபவரா? அப்படியானால் முட்டைகளை சரியாக வேக வைப்பதும், அதிலிருந்து ஓட்டை உரிப்பதும் எவ்வளவு கடினமான வேலை என்று உங்களுக்கு தெரியும்.
கபிதாஸ் கிச்சன் புகழ் கபிதா சிங், ஒரு டீஸ்பூன் எண்ணெயை தண்ணீரில் சேர்த்து, பின்னர் 10 நிமிடங்களுக்கு மேல் முட்டைகளை வேகவைக்க கூடாது என பரிந்துரைக்கிறார்.
இது அவற்றில் விரிசல்களைத் தடுக்க உதவுகிறது.
தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து முட்டைகளை வேக வைப்பது மற்றொரு பிரபலமான முறை. இது விரிசல் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
முட்டைகளை உரிப்பது எப்படி?
கபிதா கூற்றுப்படி, முட்டைகளை வேகவைத்து குளிர்ந்த பிறகு மெதுவாக உடைப்பது எளிதாக உரிக்க உதவுகிறது.
மற்றொரு வழி, அவற்றை மெதுவாக உடைத்து, பின்னர் உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்க வேண்டும்.
குறிப்பு:
ஒரு வாரம் ஃபிரிட்ஜில் வைத்த முட்டைகள், புதிய முட்டைகளுடன் ஒப்பிடும்போது ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.
+ There are no comments
Add yours