சீஸி பன்னீர் சிகார் ரோல் செய்வது எப்படி !

Spread the love

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.

அதே நேரம் குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது சொல்ல இருக்கிறோம்.

இந்த டிஷ் செய்ய வெளியில் சென்று நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்ற தேவை இல்லை. இதற்கான பெரும்பாலான பொருட்கள் நம் வீட்டிலேயே இருக்கும். பனீர், சீஸ் இருந்தால் போதுமானது. சடசடவென்று 5 நிமிடத்தில் தயார் செய்து 20 நிமிடத்தில் மொத்த வேலையும் முடிந்துவிடும்.

சீஸி பனீர் சிகார் ரோல் தேவையான பொருட்கள்

  • 1 கப் பனீர், துருவியது
  • 1/2 கப் சீஸ், துருவியது
  • 1/2 கப் கேப்சிகம், பொடியாக நறுக்கியது
  • 1/2 கப் ஸ்பிரிங் ஆனியன், பொடியாக நறுக்கியது
  • 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகள், பொடியாக நறுக்கியது
  • உப்பு சுவைக்க
  • 1 தேக்கரண்டி பூண்டு நசுக்கியது
  • 1 தேக்கரண்டி கருப்பு மிளகு
  • கோதுமை மாவு

சீஸி பனீர் சிகார் ரோல் செய்முறை 

முதலில், ஒரு கிண்ணம் மாவை எடுத்து, தண்ணீர் சேர்த்து  மென்மையான மாவை பிசைந்து, அரை மணி நேரம் ஒதுக்கி ஊறவைக்கவும். வெந்நீர் ஊற்றி பிசைந்து இறுக்கமான பாத்திரத்தில் வைத்தால் 15 நிமிடங்களில் தயாராகிவிடும்.

இதற்கிடையில், பூரணத்தை தயார் செய்து கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் பனீர், சீஸ், கேப்சிகம், பச்சை வெங்காயம், பூண்டு, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். இப்போது மாவை எடுத்து மீண்டும் நன்றாகப் பிசைந்து அதிலிருந்து சிறு உருண்டைகளாக்கவும். பின்னர் அதை சப்பாத்தி போல தேய்ந்துகொள்ளவும்.

சப்பாத்தி மிகவும் மெல்லியதாக உருட்டப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இப்போது அதை ஒரு தவாவில் போட்டு லேசாக என்னை தடவி வேகவைத்து எடுக்கவும்.  பின்னர் மாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

பின்னர் வேகவைத்த சப்பாத்தியில் பூரணத்தை வைத்து ரோல் போல உருட்டிக்கொள்ளவும். அதே போல பக்கங்களை கொஞ்சமான பேஸ்ட்  வைத்து ஒட்டிக்கொள்ளவும். அனைத்து சப்பாத்திகளையும்  இந்த செயல்முறை மூலம் ஸ்டப்பிங் செய்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து வாணலியை  வைத்து, எண்ணெய் தடவி இந்த ரோல்களை போட்டு இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை பொறுமையாக வறுத்து எடுக்கவும். இது எண்ணெய் குறைவாக பயன்படுத்தும் முறை.

எண்ணெய் சாப்பிடுவது பிரச்சனை இல்லை என்றால், இதை வாணலியில்  என்னை ஊற்றி அது நன்றாக சூடானதும், மிதமான தீயில் இந்த ரோல்களை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும். இப்போது ரோல் ரெடி. இதை சில்லி பூண்டு டிப் உடன் பரிமாறவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours