காதல் உறவில், ‘இது’ அவசியம்

Spread the love

நீங்கள் காதல் உறவில் இருந்தாலும் சரி, திருமண உறவில் இருந்தாலும் சரி நமக்கான எல்லைகளை வகுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.அதிலும் குறிப்பாக பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதை ஆகியவை இருக்க வேண்டும்.

இப்படியொரு நிலையில், உங்கள் வாழ்க்கைத் துணையிடம் ஏதேனும் விஷயம் தொடர்பாக மறுப்பு தெரிவிப்பது சற்று சவாலான விஷயமாகத் தோன்றலாம்.

குறிப்பாக அவர்கள் ஏதேனும் ஒரு கோரிக்கையை முன்வைத்து அதை நீங்கள் மறுப்பது அவ்வளவு சுலபமல்ல. இருப்பினும் உரையாடலில் சில உத்திகளை கடைப்பிடித்தால் எதையும் நாம் மறுத்துப் பேசுவது சுலபம் தான்.முதலில் துணையிடம் அன்பாக இரக்கமாக இருங்கள்.

அடுத்து மாற்று யோசனை என்பது அவசியம். மேலும் ஒருவருக்கொருவர் தெளிவான எல்லைகளை வகுத்துக் கொள்வது அவசியம்.இருவரும் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருப்பது அவசியம். உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆழமாக கவனித்தல் வேண்டும்.

நிறைவாக, நீங்கள் எந்த அளவுக்கு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அதை செய்து முடிக்க எந்த அளவு முயற்சி செய்கிறீர்கள் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை மறக்க வேணடாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours