மேடு பள்ளமான சருமமா ? இனி கவலை வேண்டாம் !

Spread the love

ஒவ்வொருவருமே அழகான, மென்மையான மற்றும் சமச்சீரான சருமத்தைப் பெறவே விரும்புவோம். ஆனால் நிறைய பேர் இப்படியான சருமத்தை கொண்டிருப்பதில்லை. பலரது முகம் மேடு பள்ளங்களாக சமச்சீரற்று அசிங்கமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்துளைகள் மூடிய நிலையில் இல்லாமல் திறந்திருப்பதே ஆகும்.

இப்படி ஒருவரது முகத்தில் உள்ள சருமத்துளைகள் விரிவடைந்து இருப்பதற்கு அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி, முதுமை, சூரிய பாதிப்பு, சரியாக சருமத்தை சுத்தம் செய்யாமை, அழுக்குகள் குவிவது மற்றும் முறையான சரும பராமரிப்பு நடைமுறைகளை பின்பற்றாமை போன்றவை காரணங்களாகும். சில சமயங்களில் மரபியல் காரணங்களால் கூட சருமத்துளைகள் பெரிதாகலாம்

முகத்தில் இப்படி சருமத்துளைகள் விரிவடைந்து, சருமம் மேடு பள்ளங்களாக இருந்தால், அது முதுமை தோற்றத்தைத் தரும். அதிர்ஷ்டவசமாக இப்படி திறந்திருக்கும் சருமத்துளைகளை சுருக்குவதற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகள் உள்ளன. இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போட்டு வந்தால், சருமத்துளைகள் சுருங்குவதோடு, சருமமும் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். இப்போது அந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் என்னவென்பதைக் காண்போம். 1. முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் * இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்துளைகள் சுருங்குவதோடு, சருமமும் பளிச்சென்று மின்னும்.

முட்டை வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக் * இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கரு, 1 டீஸ்பூன் எலுமச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சருமத்துளைகளும் சுருங்கி, சருமம் பட்டுப்போன்று இருக்கும்.

தக்காளி ஃபேஸ் பேக் * இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதை நேரடியாக முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, சருமத்துளைகள் சுருங்கி, எண்ணெய் அதிகமாக சுரப்பது தடுக்கப்பட்டு, முகமும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் * இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வர, சருமத்துளைகள் சுருங்கும் மற்றும் முகமும் பளிச்சென்று இருக்கும்.

பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக் * இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மசித்த பப்பாளியை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours