வரலாற்றில் உச்சமாக ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து, ரூ.6,000யைத் தாண்டி விற்பனையாகி வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் 2ம் தேதி ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் 100 ரூபாய் அதிகரித்து அதிர்ச்சியளித்த நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதலே தங்கத்தின் விலை அதிகரித்தது.
இன்று வர்த்தக நேர துவக்கத்திலேயே தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து. 6,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 5 ஆயிரத்து 930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம், இன்று 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.680 உயர்ந்து 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 47ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 50 ஆயிரத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஒரு கிராம் ஆபரண தங்கம் 6 ஆயிரம் ரூபாயை கடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி, ஒரு ரூபாய் 20 பைசா அதிகரித்து, 78 ரூபாய் 20 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார்வள்ளி 78 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
+ There are no comments
Add yours