இந்தியாவில் தாராளமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று நெல்லிக்காய். மிகவும் ஆரோக்கியம் நிறைந்த பழங்ககளில் ஒன்றாக இது திகழ்கிறது. அதுவும் கோடை காலத்தில் முழு நெல்லிகாய் சாப்பிட்டால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
பல ஊட்டச்சத்துகள் நிறைந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் 5 முக்கியமான நன்மைகள் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

நெல்லிக்காய் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
ஆகையால் இதை கோடை காலத்தில் தவறாமல் சாப்பிடுங்கள். இது உடலின் வெப்பத்தை தணித்து அசௌகர்யத்தை குறைக்கிறது. நெல்லிக்காய் ஜூஸ் அல்லது நெல்லிக்காய் கலந்த நீரை குடிப்பதால் உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதோடு உடலின் உட்புற வெப்ப சமநிலையை முறையாக பராமரிக்க உதவுகிறது.
மேலும், பல்வேறு சரும அழகு மற்றும் தலைமுடி பராமரிப்பில் நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நமது உடலில் கொலஜன் உற்பத்தியை மேம்படுத்தி ஆரோக்கியமான சருமத்தையும் இளமை தோற்றத்தையும் தருகிறது. மேலும் தலைமுடி நன்றாக வளரவும் எளிதில் உடைந்து போகாமல் இருக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.
+ There are no comments
Add yours