பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் துளசியில் பல வகைகள் உள்ளன. துளசி நறுமணம் தரக்கூடிய செடி வகையாகும். எனவே இது ஆன்மீக ரீதியாக கோவிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. துளசியை ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
துளசி வயிற்றுப் பொருமலைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
துளசி இலைச்சாறை 2-3 துளிகள் காதுக்குள் விட்டால் காதுவலி குறைகிறது.
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. இதனை எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
துளசி இலைகளை சிறிது எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்துப் படர் தாமரைப் புண்களுக்குப் போட்டு வந்தால் குணமாகும்.
காலில் வீக்கம் ஏற்பட்டால் துளசியை அரைத்து வீக்கத்தில் தடவி வந்தால் வீக்கம் குறையும்.
+ There are no comments
Add yours