கோடை வெயிலை தணிக்க.. இந்த 5 இயற்கை மூலிகைகள் முக்கியம்!

Spread the love

கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிக்க நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உலக வெப்பநிலையானது தற்போதைய அளவை விட 1 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரித்தால், கோடி கணக்கான மக்கள் வெப்பம் மற்றும் humid கண்டிஷன்களுக்கு ஆளாக நேரிடும்.

இந்த நிலையில், கோடை காலத்தில் ஏற்படும் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவும் 5 குளிர்ச்சியான ஆயுர்வேத மூலிகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

துளசி: மிக புனிதமான மூலிகைகளில் ஒன்றாக இருக்கும் துளசி பொதுவாக இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொற்றுகளுக்கு நிவாரணமாக மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதினா: மின்ட் இரு குறிப்பிடப்படும் புதினாவின் குளிரூட்டும் பண்புகளை பற்றி நாம் அனைவருமே அறிவோம். அந்த வகையில் தினமும் புதினாவை எடுத்து கொள்வதன் மூலம் இந்த கோடையில் உங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளலாம்.

கற்றாழை: எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கி நம் உடலுக்கு ஆல்-ரவுண்டராக செயல்படுகிறது. அலோவேரா எனப்படும் கற்றாழை. இது அதன் குளிர்ச்சி விளைவுகளுக்காக பிரபலமாக உள்ளது. பொதுவாக கற்றாழையானது எரிச்சல் மிகுந்த சருமத்திற்கு நிவாரணம் அளிக்கிறது.

கொத்தமல்லி: கொத்தமல்லியானது கோடை காலத்தில் ஏற்படும் பல செரிமான பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவி உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.

இஞ்சி: உங்கள் டயட்டில் இஞ்சியை சேர்த்து கொள்வது வயிறு உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours