மாலை நேரம் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான வாழைப்பூ வடை எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பூ -50 கிராம்
பெரிய வெங்காயம்- 2
ஸ்பூன்உப்பு- 2
துவரம் பருப்பு- 100 கிராம்
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
தனியாத்தூள்- 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
சிறிதளவு கொத்தமல்லி
அரை லிட்டர்எண்ணை
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சுத்தம் செய்த வாழைப்பூவை மிக்சியில் ஒரு அடி அடித்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஊற வைத்த பருப்பை கொரகொரப்பாக அரைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கலந்து விட்டு ஐந்து நிமிடத்திற்குப் பின் வடை போல் தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு எண்ணெயை சூடு செய்து தட்டிய வடையை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது சுவையான வாழைப்பூ வடை தயார்.
+ There are no comments
Add yours