இந்தியாவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பற்றி தெரிஞ்சுக்கணுமா ? இதை படிங்க முதல்ல !

Spread the love

இந்தியாவில் காய்ச்சல், சளி, ஒவ்வாமை மற்றும் வலி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் உட்பட பரவலாக விற்கப்படும் சுமார் 156 நிலையான-டோஸ் கலவை (FDC) மருந்துகளை, மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறி இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது.

FDC மருந்துகள் என்பவை ஒரு நிலையான விகிதததில் இரண்டு அல்லது அத்ற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்து பொருட்களின் கலவையைக் கொண்டவையாகும். இந்த வகையான மருந்துகளை காக்டெய்ல் மருந்துகள் என்றும் அழைப்பர்.

சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பிரபலமான மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வலி நிவாரணி மருந்துகளில் ஒன்றாக பயன்படுத்தப்படும் பிரபலமான கலவைகளில் ஒன்றான ‘Aceclofenac 50mg Paracetamol 125mg மாத்திரையை அரசு தடை செய்துள்ளது. இது தவிர இன்னும் 155 FDC மருந்துகளை இந்திய அரசு பாதுகாப்பற்றதாக கருதி விற்பதற்கு தடை விதித்துள்ளது.

அந்த மருந்துகளாவன:

  • மெஃபெனாமிக் அமிலம் + பாராசிட்டமால் ஊசி
  • செடிரிசின் எச்.சி.எல் + பாராசிட்டமால் + ஃபெனைல்ஃப்ரைன் எச்.சி.எல்
  • லெவோசெடிரைசின் + ஃபெனைலெஃப்ரின் எச்.சி.எல் + பாராசிட்டமால்
  • பாராசிட்டமால் + குளோர்பெனிரமைன் + மாலேட் + ஃபீனைல் ப்ரோபனோலமைன்
  • கேமிலோபின் டைஹைட்ரோகுளோரைடு 25 மி.கி பாராசிட்டமால்
  • டிராமடோல் என்னும் ஒரு ஓபியாய்டு அடிப்படையிலான வலி நிவாரணி

மேலும் டாரைன், காஃப்பைன் ஆகியவற்றின் கலவையையும் மத்திய அரசு தடை செய்துள்ளது. இப்படி நிலையான டோஸ் காம்பினேஷன் மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவது மனிதர்களுக்கு பாதுகாப்பற்றதாகவும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய அரசு கருதுகிறது. இப்படி FDC மருந்துகளை பகுத்தறிவற்றதாக கருதி, ஒரு நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ததாக அரசு கூறியுள்ளது.

மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியமும் (DTAB) இந்த FDC மருந்துகளை ஆய்வு செய்து, இந்த மருந்துகளில் உள்ள பொருட்களுக்கு எந்த சிகிச்சை நியாயமும் இல்லை என்று கூறியது. எனவே இந்த FDC மருந்துகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும் பொது நலன் கருதி, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940ன் பிரிவு 26 A இன் கீழ், இந்த FDC மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்வது அவசியம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே நண்பர்களே! உங்கள் வீட்டில் இந்த காம்பினேஷனில் மருந்துகள் இருந்தால், அவற்றை பயன்படுத்துவது உடனே நிறுத்துங்கள். மேலும் எந்த மருந்தையும் எடுக்கும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே எடுங்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours