இந்தியாவில் காபி, டீ போன்றவை பிரபலமான பானங்களாக அனைவராலும் விரும்பி பருகப்படுகிறது.
இதுவே உலகின் பிற பகுதிகள், அதிலும் குறிப்பாக மேற்கு நாடுகளில் பிளாக் காபி அதிகமாக பருகப்படும் ஒரு பானமாக அமைகிறது.
இதற்கான காரணம் என்னவென்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
அமெரிக்கர்கள் மற்றும் மேற்கு உலகத்தில் பிளாக் காபி விரும்பப்படுவதற்கான முக்கிய காரணம் அதன் தனித்துவமான சுவையாகும்.
ஃபிரஷாக அரைக்கப்பட்ட காபி கொட்டைகளில் லேசான இனிப்பு மற்றும் பழ சுவை கலந்து இருக்கும். இது அமெரிக்கர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.
இந்தியாவில் உள்ள காபி கலாச்சாரம் என்பது உலகின் பிற பகுதியை ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானது. பெரும்பாலும் இந்தியாவில் கிடைக்கக்கூடிய காபி பொடியானது குறைந்த தரம் கொண்டதாக அமைகிறது.
இதனால் காபியில் லேசான கசப்பு தன்மை ஏற்படுகிறது. எனினும் உலகின் பிற பகுதிகளில் பின்பற்றப்படும் காபி கலாச்சாரமானது இன்ஸ்டன்ட் காபிக்கு பதிலாக ஃபிரஷாக அரைக்கப்பட்ட காபி கொட்டைகளை பயன்படுத்துகின்றனர்.
காபியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. காபியில் சிறிதளவு ரிபோஃபிளவின் என்ற B வைட்டமின் காணப்படுகிறது. இது உடலின் ஆற்றல் வளர்சிதை மாற்றம் மற்றும் செல் வளர்ச்சியில் முக்கிய பங்கு கொண்டுள்ள ஒரு வைட்டமின் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours