இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்?

Spread the love

பலரும் இரவில்தான் நினைத்த உணவை, நினைத்த நேரத்தில் சாப்பிடுகிறார்கள். இரவு உணவை எப்போதும் சீக்கிரமே சாப்பிட்டுவிட வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பலர் நடு இரவிலெல்லாம் இரவு உணவை சாப்பிடுவார்கள். இது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை தரக்கூடும். சரி.. இரவு உணவை எப்போதுதான் சாப்பிட வேண்டும்?

ஆய்வுகள் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது என்கிறது. நமது மனித உயிரியல் கடிகாரத்தின் அடிப்படையில் பார்க்கப்போனால் இந்த நேரத்திற்குள்தான் இரவு உணவை முடித்துவிட வேண்டும்.

ஆனால் இந்த நேரத்தை பலராலும் கடைப்பிடிக்க இயலாது. எனவேதான் குறைந்தபட்சம் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும் என்கின்றனர். சாப்பிட்டு உடனே தூங்குவதால் நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை , செரிமான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.

உடல் எடையை பராமரிக்க நினைக்கிறீர்கள் எனில் நீங்கள் தூக்கத்தை வர வைக்க மெலடோனின் சுரக்கத்தொடங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும். அதாவது நீங்கள் 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும்.

  • செரிமான பிரச்சனை, நெஞ்சு எரிச்சல், வாயு பிரச்சனை ஆகியவற்றால் அவதிப்படுவோர் இரவு உணவை சீக்கிரமே சாப்பிட வேண்டும். அதுவும் எளிதில் செரிமானிக்கக் கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள வேண்டும் எனில் 8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. உங்கள் உணவு நேரத்திற்கும் தூங்க நேரத்திற்கும் இடையில் குறைந்தது 3 -4 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.

முதலில் உங்கள் உடல் சொல்வதை கவனிப்பது அவசியம். உங்களுக்கு பசி எடுப்பதுபோல் இருந்தால் அது எந்த நேரமாக இருந்தாலும் தள்ளிப்போடாமல் சாப்பிடுவது நல்லது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours