இட்லி, தோசைக்கு ஒரு சுவையான ‘தக்காளி தொக்கு’ ட்ரை பண்ணி பாக்கறீங்களா ?

Spread the love

காலையில் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தக்காளி சட்னி தான் ரொம்ப பிடிக்குமா?

ஆனால் தக்காளி சட்னியை செய்து உங்களுக்கு போரடித்துவிட்டதா? அப்படியெனில் ஒருமுறை தக்காளி தொக்கை செய்யுங்கள். இந்த

உங்களுக்கு தக்காளி தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: * மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன் * சீரகம் – 1/2 டீஸ்பூன் * வெந்தயம் – 1/4 டீஸ்பூன் * வரமிளகாய் – 2 * எண்ணெய் – 2 டீஸ்பூன் * தக்காளி – 3 (நறுக்கியது) * பூண்டு – 10 பல் * இஞ்சி – 1 இன்ச் துண்டு * பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) * புளி – சிறிய துண்டு * கொத்தமல்லி – சிறிது * உப்பு – சுவைக்கேற்ப * வெல்லம் – 1/4 டீஸ்பூன்

செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி விதை, வெந்தயம், சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதை இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும். , * பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து , அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். * பின் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கி அடுப்பை அணைத்துவிட வேண்டும். * பிறகு அதில் புளி, கொத்தமல்லியை சேர்த்து, அந்த சூட்டிலேயே வதக்கி குளிர வைக்க வேண்டும். * பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அதில் வதக்கிய தக்காளியை சேர்த்து, நீர் சேர்க்காமல், சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து சற்று கொகொரவென்று அரைத்து இறக்கினால், சுவையான தக்காளி துவையல் தயார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours