உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அயோத்தி தாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை வரும் 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலுக்கு 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாடு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ராமர் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வந்து தரிசனம் செய்யவுள்ளனர். இதனால் அயோத்தி ரயில்வே நிலையத்தை புனரமைக்கும் பணி என்பது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ரயில் நிலையத்தை டிசம்பர் 30ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
இதற்கிடையே தான் இன்று அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ரயில்வே சந்திப்பு (Ayodhya Railway Juction) என அந்த ரயில் நிலையத்துக்கு பெயர் இருந்த நிலையில் தற்போது அது அயோத்தி தாம் சந்திப்பு (Ayodhya Dham Junction) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அயோத்தியின் மக்களவை உறுப்பினர் லல்லு சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அயோத்தி தாம் என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தை குறிக்கும் சொல்லாக இருக்கிறது.
+ There are no comments
Add yours